தமிழகம்

இந்த வருட பொங்கலுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறையா? குதூகலத்தில் அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள்!

Summary:

Leave for pongal festival

 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  2020 பொங்கலுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

2020 ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் விடுமுறை இருக்கிறது. அதன் பின்னர் 18 மற்றும் 19 சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை இருக்கிறது. மேலும் 13-ம் தேதி திங்கள் கிழமை வேலைநாளாக இருக்கும் நிலையில், அன்று விடுமுறை எடுத்துக்கொண்டால் அதற்கு முந்தைய 11 மற்றும் 12-ம் தேதிகள் சனி, ஞாயிறு வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

Image result for pongal festival

பள்ளி, கல்லூரிகளைப் பொறுத்த வரை திங்கள் கிழமை விடுமுறை விட்டு, வேறு நாளில் அதை ஈடு செய்து கொள்ளலாம். ஆனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

2019 ஆம் முடிந்த பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை விட்ட முதல்வர், இந்த முறை  9 நாட்களும் விடுமுறை விடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி விடுமுறை வந்தால் அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்தான். இதனால் அரசு ஊழியர்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement