கழிவுநீர்தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்தபோது விபரீதம்... கூலிதொழிலாளி மயங்கி விழுந்து பலி..!

கழிவுநீர்தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்தபோது விபரீதம்... கூலிதொழிலாளி மயங்கி விழுந்து பலி..!



labour-cleaning-a-drainage-and-dead-nrvdca

சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் இணைப்பை சுத்தம் செய்தபோது கூலிதொழிலாளி ஒருவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி அருகே கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 28). ஓட்டுநராக வேலை செய்து வரும் இவர், வேலையின்மை காரணமாக கூலி வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வெளியே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது கழிவுநர் தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்த ஹரிஷ் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

thiruvallur

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததனை தொடர்ந்து, ஹரிஷின் உடலை பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்