தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
பாஜகவில் இணைகிறாரா மு.க.அழகிரி? தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பரபரப்பு பேட்டி.!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜகவுக்கு போகிறார், ரஜினி கட்சிக்குப் போகிறார் என செய்திகளும் வந்தன. ஆனால் நான் கருணாநிதியின் மகன், பாஜகவுக்கு எல்லாம் செல்ல முடியாது என அழகிரி திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசுகையில், பாஜகவில் இணைவதற்கு பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களும் பாஜகவில் இணைய உள்ளனர்.
வருகின்ற 21 ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் தமிழகம் வருவதால் பாஜகவினருக்கு ஊக்கமும், தைரியமும் அதிகரித்துள்ளது. அவரின் வருகை, வரும் தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும். முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, அமித்ஷாவை சந்திப்பாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அதே போல் அவர் பாஜகவில் இணைவது குறித்தும் என்னுடன் யாரும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.