விரைவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

விரைவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!


kovai---vaiampalaiyam---tamilnadu-cm-edappadi

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் அமைய இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். இவ்விழாவில் ஏராளமான விவசாயிகளும் விவசாய அணி தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

eps

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு குறித்து பேசினார். ஆளும் அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் கோதாவரியிலிருந்து வீணாக கடலில் கலக்கும் 2 லட்சம் டிஎம்சி தண்ணீரை காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும் என்று உறுதியளித்தார்.

மேலும் விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொள்ளும் அரசு, விவசாயிகள் பல்வேறு வகையான பசுக்கள், ஆடுகள், கோழிகள், குதிரைகள், மீன் வளர்ப்பு போன்ற முறைகளை மேலும் நன்கு அறிந்து கொண்டு அதனைக் கடைபிடித்து அவர்களின் பொருளாதாரம் மேம்பட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் விரைவில் தமிழகத்தில் அமைய உள்ளது என்று தெரிவித்தார்.