தமிழகம் இந்தியா

ஆசையை அடக்கமுடியாமல் கைதியுடன் சேர்ந்து போலீசார் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

Summary:

Kerala Police dance with accused in tik tok video

தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சமூகம் வலைத்தளங்கள் என்ற ஓன்று இன்று இளைஞர்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை உண்டாகியுள்ளது. இதில் குறிப்பாக டப்மாஷ் என்று சொல்லப்பட்டு தற்போது டிக் டாக் என இன்றைய இளைஞர்களை தன்வசப்படுத்தியுள்ளது இழந்த செயலி.

பிடித்த சினிமா வசனங்கள், ஆடல், பாடல் என தங்களது திறமைகளை, தங்களது ஆசைகளை இதுபோன்ற செயலி மூலம் வெளிப்படுத்திவருகின்றன்னர் இன்றைய இளைய சமுதாயத்தினர். சாதாரண மக்களையும் தாண்டி, பலதரப்புப்பட்ட பிரபலங்களும் இந்த டிக் டாக் வீடியாவிற்கு அடிமையாகத்தான் உள்ளனர்.

இந்நிலையில் போலீஸ் உடை அணிந்து, டியூட்டி நேரத்தில் ஒருசில போலீசார் கைதியுடன் நடுரோட்டில் டிக் டாக் செய்துள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் முதலில் கைதி ஒரு பின்னணி பாடலுக்கு ஆட, உடனே ஆசையை அடக்க முடியாமல் கூட இருந்த மூன்று காவல் துறை அதிகாரிகளும் அந்த பாடலுக்கு கைதியுடன் சேர்ந்து ஆடுகின்றனர்.

வேலை நேரத்தில் காவல் துறையே இப்படி கைதியுடன் டிக் டாக் செய்து இப்படி நடுரோட்டில் ஆடலாமா என பலரும் கேள்விகேட்டுவரும் நேரத்தில் இந்த சம்பவம் கேரளாவில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதோ அந்த வீடியோ.


Advertisement