ஊரே பேசுற விஷயத்திற்கு நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை, ரொம்ப பெரிய தப்பு ,ரஜினியிடம் அதிரடியாக கேள்வி எழுப்பிய பிரபல நடிகை .!



kasthuri-questioned-rajini-in-twitter-about-sophia-issu

ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்த தமிழிசை சவுந்தராஜனை கண்டதும் விமானத்தில் பயணித்த மாணவி சோபியா, பாசிச பாஜக ஆட்சி ஒழிக., என்று பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார்.

kasthuri

இதனால் கடுப்பான தமிழிசை விமானத்திலேயே, அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன், தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக அவரது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோபியா மீது புகார் அளித்தார்.

மேலும் இதனால் கைது செய்யப்பட்ட மாணவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 இதுதொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். 

  kasthuri

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று பதிவிட்டுள்ளார்.