புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
முழு ஊரடங்கு நாளில் தம்பதி செய்த காரியம்.. கைக்குழந்தையை வச்சி எப்படியெல்லாம் கதை சொல்றாங்க..!
ஜன. 9 ஆம் தேதியான நேற்று தமிழ்நாட்டில் ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் மாநில எல்லைகள் மூடப்பட்டன. மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்றது. அத்தியாவசிய பணிகள் உட்பட விலக்கு அளிக்கப்பட்ட பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து கைக்குழந்தையுடன் ஈரோடு, சத்தியமங்கலம் பண்ணாரி எல்லைக்கு வந்த தம்பதி, திருப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக தெரிவித்தது. அதிகாரிகள் தொடர்ந்து மருத்துவ ஆவணங்களை கேட்ட நிலையில், தம்பதிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளது.
சுதாரித்துக்கொண்ட காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், இறுதியில் காரில் வந்த தம்பதி நாங்கள் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லத்தான் வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தம்பதிகள் வந்த வழியிலேயே திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.