தமிழகம்

குடித்துவிட்டு தினமும் தகராறு செய்த மகன்.. தீக்குளித்து தற்கொலை செய்த பெற்றோர்.. கண்ணீர் சோகம்.!

Summary:

குடித்துவிட்டு தினமும் தகராறு செய்த மகன்.. தீக்குளித்து தற்கொலை செய்த பெற்றோர்.. கண்ணீர் சோகம்.!

தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என பெற்றோரிடம் மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனால் மனஉளைச்சலுக்கு ஆளான பெற்றோர் தங்களின் உயிரை மாய்த்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், மேலகிருஷ்ணன் புதூர் - சீயோன் நகரை சேர்ந்தவர் செல்வ ஜெயசிங் (வயது 68). இவரின் மனைவி தங்கம் (வயது 65). இவர்கள் இருவருக்கும் சதீஷ், இயேசு ஜெபின் (வயது 32) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சதீஷுக்கு திருமணம் முடிந்து. தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இயேசு ஜெபினுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4 வருடமாக செல்வ ஜெயசிங் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த நிலையில், கூலி தொழில் செய்து வந்த இயேசு ஜெபின், அவ்வப்போது மதுபோதையில் வீட்டிற்கு வந்து திருமணம் செய்து வைக்கக்கூறி பெற்றோரை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து துவம்சம் செய்து வந்துள்ளார். 

நேற்று இரவிலும் மதுபோதையில் அட்டகாசம் தொடர, மனஉளைச்சலுக்கு சென்ற செல்வ ஜெயசிங், தங்கம் ஆகியோர் சதீஷுக்கு தொடர்பு கொண்டு இளயமகனின் நடவடிக்கையை தெரிவித்து, நாங்கள் உயிருடன் இருக்க விருப்பமில்லை என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளனர். பதறிப்போன மகன் வருவதற்குள், ஜெயசிங் - தங்கம் ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துள்ளனர். 

வீட்டிற்கு வந்த மூத்த மகன் சதீஷ், சுசீந்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement