மகள் சொல்வதை கேட்காத தந்தை.. தாயை இழந்த சோகத்தில், 15 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு.!



Kanyakumari: Class 10 Student Dies by Suicide; Police Investigating

தாயை இழந்த விரக்தியில் 15 வயது சிறுமி எடுத்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு, வடக்கநாடு, புல்லாணிவிளை கிராமத்தில் வசித்து வருபவர் ரிங்கில் ஜெயக்குமார் (வயது 48). வீட்டில் பசுமாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயக்குமாரின் மனைவி நிர்மல் சுனிதா. தம்பதிகளுக்கு ரினோசியா என்ற 15 வயதுடைய மகள் இருக்கிறார். ஒரு மகனும் இருக்கிறார். சிறுமி ரினோசியா பூவான்கோட் பகுதியில் செயல்படும் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: குட்டி குட்டி ஆடையுடன் ரீல்ஸ்..  மாமனார்-மாமியார் தாக்கிய மருமகள்.. மனமுடைந்து எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!

மனமுடைந்தார்:

இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக நிர்மல் சுனிதா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தவே, ஜெயக்குமார் குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார்.மேலும், தாய் இறந்த சோகத்தில் ரினோசியா எப்போதும் மனமுடைந்து காணப்பட்டு இருக்கிறார். மேலும், தற்போது வசித்து வரும் வீட்டை விற்பனை செய்துவிட்டு, வேறொரு வீட்டுக்கு குடிபெயரெலாம் எனவும் தந்தையிடம் கூறிவந்துள்ளார். இந்த விசயத்துக்கு தந்தை மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடந்துள்ளது.

kanyakumari

தற்கொலை:

இந்நிலையில், சம்பவத்தன்று ரிங்கிள் ஜெயகுமர் பால் விற்பனை செய்ய தக்கலைக்குச் செல்லவே, பள்ளிக்குச் சென்ற ரினோசியா மற்றும் அவரின் சகோதரர் மாலையில் வீடு திரும்பி இருக்கின்றனர். ஜெயக்குமார் விற்பனையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக்கண்டு அலறி இருக்கிறார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு மாணவியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரியாணி எலும்புத்துண்டு தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் மரணம்.. ஈரோட்டில் சோகம்.!