டேங்கர் லாரி தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. இளைஞர் கொடூர கொலை.! வீடுபுகுந்து திரைப்பட பாணியில் கொடூரம்.!
தவெக நிர்வாகி உட்பட 7 பேர் இளைஞரை கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டேங்கர் லாரி தண்ணீர்:
சென்னையில் உள்ள முகப்பேர், சின்ன நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் முருகதாஸ் (வயது 56). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி செல்வி. தம்பதிகளுக்கு சரத் (வயது 27) என்ற மகனும், சஞ்சய் (வயது 24) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். மாநகராட்சி சார்பில் இவர்களின் வீட்டுக்கு குடிநீர் வழங்கப்படும் நிலையில், நேற்று முன்தினம் டேங்கரில் வந்த குடிநீருக்காக அனைவரும் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!
பீர் பாட்டில் தாக்குதல்:
அப்போது, சரத், சஞ்சய் தண்ணீர் பிடிக்கவே, அதே பகுதியில் வசித்து வரும் உதயராஜா என்பவரும் வந்துள்ளார். அப்போது, இவர்கள் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இது கைகலப்பாக மாற உதயராஜா தாக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் இவர்களை பிரித்து அனுப்பி வைக்க, தாக்குதலில் காயமடைந்த உதயராஜா ஆத்திரத்தில் நண்பர்களை அழித்துக்கொண்டு சஞ்சய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு பட்டாக்கத்தி, பீர் பாட்டில் கொண்டு வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது.
சஞ்சய் பலி:
சஞ்சய், சாரத்தை கும்பல் வெட்ட முயற்சித்த நிலையில், இருவரும் கட்டிலுக்கு அடியில் பதுங்கிக்கொண்டனர். விடாது துரத்திய கும்பல் இருவரையும் வெட்டி இருக்கிறது. பின் அங்கிருந்து தப்பிச் சென்றது. மகன்களை காப்பாற்ற வந்த முருகதாஸும் காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த நொளம்பூர் காவல்துறையினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சய் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
7 பேர் கைது:
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல்துறையினர் ரூபேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். அவர் அதிகாரிகளை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றதால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். மேலும், அவருடன் இருந்த நவீன் குமார் (வயது 24), உதயராஜ் (வயது 21), சூர்யா (வயது 20), கார்த்திக் ராஜா (வயது 28), ராகேஷ் ராஜா (வயது 26), மேஷாக் (வயது 22), சூர்யபிரகாஷ் (வயது 27) கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக், சூர்யா, ராகேஷ் ஆகியோர் தவெக நிர்வாகிகள் ஆவார்கள்.
இதையும் படிங்க: மதுபோதை தகராறால் துள்ளத்துடிக்க பலியான இளைஞர்.. நண்பர்கள் அரங்கேற்றிய வெறிச்செயலால் சோகம்.!