தமிழகம்

நண்பர்களை சோதிப்பதற்காக, தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து பகிர்ந்த இளைஞர்! அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!

Summary:

kanneer anjali poster

சமூக வலைதளங்களில் இளைஞர்களின் சேட்டை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சமீபத்தில் டிக் டாக் என்ற செயலி மூலம் பல விபரீத செயல்கள் நடந்துள்ளன. டிக் டாக்கில் தாங்கள் செய்யும் நிகழ்வுகள் பலரையும் கவர வேண்டும் என்பதற்காக பலர் விபரீத முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் பல உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் நாட்டைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் திருப்பூரில் வேலை செய்து வருகின்றார். இவர் தனது நண்பர்களை சோதனை செய்ய வேண்டுமென்பதற்காக அவரது முகநூல் பக்கத்தில் அவருக்கு, தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து பகிர்ந்துள்ளார். 

இதனைப் பார்த்த ஒரு சிலர், அந்த போஸ்டரை "ஸ்க்ரீன் ஷாட்" எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்து, அந்த இளைஞருக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். இதனை அறிந்த அந்த இளைஞரின் உறவினர்கள் அந்த இளைஞரின் நம்பருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞரின் உறவினர்கள், பலரிடம் போனில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்டுள்ளனர். பின்னர் தான் தெரிந்தது அவர் தனது நண்பர்களை சோதிப்பதற்காக முகநூலில் இவ்வாறு  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

 பின்னர் பலரும் நேரில் சென்று அந்த இளைஞரை கண்டபடி திட்டி உள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார் அந்த இளைஞர். அந்த இளைஞர் செய்த செயல் அவரின் உறவினர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement