குடும்ப சண்டையால் மனமுடைந்துபோன இளம்பெண்; கைக்குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்த பரிதாபம்.!



Kanchipuram Uthiramerur Girl Suicide 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சாலவாக்கம் கரியப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். தச்சராக வேலை பார்க்கிறார். 

இவரின் மனைவி ரம்யா (வயது 23). தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். ரம்யாவிற்கும்-பரமேஸ்வரனுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

kanchipuram

இந்நிலையில், சம்பவத்தன்று இதனால் மணமுடைந்து போன ரம்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.