அளவுகடந்த காதல்! பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை தோளில் சுமந்து 2 மகன்களுடன் 150 கி.மீ தூரம் நடந்த சென்ற மனைவி! அதுவும் எங்கு போயுள்ளனர் பாருங்க! நெகிழ வைக்கும் வீடியோ காட்சி....



woman-carries-paralyzed-husband-kanwar-yatra-up

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண். புனித கன்வார் யாத்திரை பயணத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சச்சினை தனது தோளில் சுமந்து, ஹரித்வாரிலிருந்து மோடிநகர் வரை 150 கிலோமீட்டர் நடந்தார்.

இரு சிறிய பிள்ளைகளுடன் இந்த கடினமான பயணத்தை தொடங்கிய ஆஷா, “ஒருநாள் என் கணவர் மீண்டும் நடக்க வேண்டும்” என்ற நம்பிக்கையோடு பயணித்தார். கடந்த ஆண்டு முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் நடக்க இயலாமல் போனார். 13 ஆண்டுகளாக தொடர்ந்த யாத்திரையை தவிர்க்க வேண்டிய சூழலில், அவருக்காக அவளே சுமந்துப் பயணிக்கத் துணிந்துள்ளார்.

இந்த உணர்வுபூர்வமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. X-இல் @pratik_khare இந்த வீடியோவை பகிர்ந்து, “ஹரித்வாரில் ஒரு பெண் தனது கணவரை தோளில் சுமந்து சிவபெருமானை வழிபட்டார்; இது சவான் மாத பக்தியின் உண்மையான வடிவம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா! நம்பவே முடியல... 20 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த பெண்! பல் சிகிச்சைக்கு பிறகு நடந்த அதிசயம்! வியக்க வைக்கும் சம்பவம்...

இது பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. “அன்பும், தைரியமும், பக்தியும் ஒன்றாக கூடிய படம் இது”, “இந்திய பெண்மையின் உண்மையான வலிமை” என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். உண்மையான காதலும் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான பாசமும் இன்னும் இந்த உலகில் வாழ்கின்றன என்பதை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்! பள்ளி சிறுமியின் கழுத்தில் கத்தி! பக்கத்துல வந்த அறுத்துருவேன் மிரட்டிய சிறுவன்! சினிமாவை மிஞ்சிய மிரட்டல்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!