உண்ட வீட்டிற்கே துரோகம்.. தாய்மாமன் வீட்டில் நண்பர்களை ஏவி மச்சான் செய்த பரபரப்பு செயல்.!



Kanchipuram Man Robbery His Relation House Change Lifestyles Finally 3 Arrested by Cops

கத்தி முனையில் பெண்களிடம் 44 சவரன் நகை, ரூ.1 இலட்சம் ரொக்கம் கொள்ளையடுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தில், கொள்ளைபோன வீட்டு உரிமையாளர் மைத்துனர் மகன் உட்பட 3 பேர் கைதாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லன் மெட்ரிக் பள்ளி, மாருதி நகரை சார்ந்தவர் ஆடிட்டர் மேகநாதன். இவருக்கு 2 சகோதரிகள் உள்ளார்கள். மேகநாதன் மற்றும் அவரின் 2 சகோதரிகளுக்கு திருமணம் முடிந்திருந்தாலும், அனைவரும் தங்களது குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். மேகநாதனின் சகோதரி கணவர்கள் அரசு துறையில் பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இருந்த ஆண்கள் பணிக்கு சென்றுவிட, 2 சகோதரிகள் மற்றும் மேகநாதனின் மனைவி மட்டும் இருந்துள்ளனர். மதியம் 1 மணியளவில் தீடீரென வீட்டிற்குள் முகமூடி அணிந்து வந்த 4 பேர், கத்தி முனையில் மிரட்டி கை-கால்களை கட்டிப்போட்டு 44 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 இலட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

kanchipuram

பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்கையில், சம்பவத்திற்கு சிலமணிநேரம் முன்னர் வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதும் உறுதியானது. 

3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்ட்ட நிலையில், சம்பவத்தன்று பாலகிருஷ்ணனின் தந்தை மகன் சந்தானகிருஷ்ணன் என்பவர் தாய்மாமன் வீட்டில் நண்பர்களை ஏவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது. மேலும், மதுபானம் அருந்தி, கோழி சண்டைக்கு பந்தயம் கட்டி உல்லாச வாழ்க்கை வாழ பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது. 

kanchipuram

இதனையடுத்து, சந்தானகிருஷ்ணனின் வாக்குமூலத்தின் பேரில், அவரது நண்பர் கெளதம், சிவகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 7 வருடமாக தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்து, உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களிடம் இருந்து 44 சவரன் நகைகள், ரூ.1 இலட்சம் பணம், 31 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.