திமுக பிரமுகர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சேகர் (வயது 52). இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரின் மனைவி சைலஜா. இவர் கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். நேற்று சேகர் தனது இருசக்கர வாகனத்தில் அங்குள்ள தலையாரி தெரு பகுதியில் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியில் வந்த மர்ம நபர் சேகரை வழிமறித்து, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அரிவாளாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனால் படுகாயமடைந்த சேகர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சென்னைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.