கொலை நடந்த 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காஞ்சி போலீசார்..!

கொலை நடந்த 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காஞ்சி போலீசார்..!


Kanchi police arrested the criminals within 1 hour of the murder

காஞ்சிபுரம்  மாவட்டம், ராஜகுளம் கிராமத்தை சேர்ந்தவர், சிவஞானம் (56). இவரது மனைவி சாந்தி (48). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே இவருக்கும் இவரது பக்கத்துக்கடையில் பாஃஸ்ட் புட் உணவகம் நடத்திவரும் சரவணன் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளாக இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து வீடு திரும்பிய சிவஞானத்தை, சரவணன் அவரது நண்பர்களான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23), ஆபேல்(24) ஆகியோருடன் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகள் மூன்று பேரையும் வலைவீசித்தேடினர்.

அப்போது சம்பவம் நடந்த அதே பகுதியில் முட்புதரில் பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த மூவரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். முன்னதாக, கைதான மூவர் மீதும்  தாலுகா காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்தில் காஞ்சி தாலுகா காவல்துறையினர்  குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.