நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளைமுதல் மீண்டும் மதுக்கடைகள் திறப்பு..? இனி மக்களே தீர்ப்பு வழங்க வேண்டும்..! டாஸ்மாக் குறித்து கமல்ஹாசன்.!

மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலகாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக்கடைகள் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் செயல்பாட்டில் இருந்த மதுக்கடைகள் பல்வேறு போராட்டங்கள், கண்டனங்கள், உயர் நீதிமற்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் மூடப்பட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமாற்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மதுக்கடைகளை மூடக்கூறி உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பிற்கு இடைகலை தடை விதித்ததோடு, மதுவிற்பனைக்கு உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.
இதனால் நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் மது விற்பனை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன், உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. என கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 15, 2020