சீமான் உங்கள் அணிக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா? நடிகர் கமல் ஓப்பன் டாக்.!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது.
இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சீமான், சரக்குமார் எங்கள் அணிக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல் கூறுகையில், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும், சீமான், சரத்குமார் போன்றோர் எங்கள் அணிக்கு வரலாம், மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், எங்கள் அணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.