விஏஓ-க்கே இந்த நிலைமையா? பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவியாளரின் அதிர்ச்சி செயல்.. சாணியடி.!

அரசு ஆவணங்களை தனிப்பட்ட முறையில் வீட்டிற்கு எடுத்து சென்றதை, உயர் அதிகாரி கண்டித்தால், உள்ளூர் ஆட்டக்காரி என திமிரில் செயல்பட்ட பெண், மற்றொரு பெண்ணின் முகத்தில் சாணி வீசி அவகேடான செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை தந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியின் மீது, சாணி வீசிய உதவியாளர் சங்கீதாவின் அதிர்ச்சி செயலால் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உள்ளூரை சேர்ந்த சங்கீதா, அலுவலக கணக்கு புத்தகத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் பாய்சன்.. தாயின் செயலா இது? மாணவி உயிர் ஊசல்..! தமிழகமே ஷாக்.!
தகராறு முற்றி சாணி வீசி தாக்குதல்
இதனை தமிழரசி கண்டித்ததால், அவரை அலுவலகத்தில் வைத்து பூட்டினார். இதுதொடர்பாக தமிழரசி அளித்த புகாரில் சங்கீதா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி பணியில் இருந்தபோது, அலுவலகத்திற்கு வந்த சங்கீதா விஏஓ முகத்தில் மாட்டுச்சாணம் வீசி தாக்குதல் நடத்திவிட்டு, அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இந்த விஷயம் தொடர்பாக தமிழரசி தற்போது அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சங்கீதாவை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாகசத்தால் சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்.!