நள்ளிரவில் வீடு புகுந்த எமன்! தூக்கத்திலேயே பறிபோன இரு பிஞ்சு உயிர்கள்..! உயிருக்கு போராடும் தாய்.. அதிர்ச்சியில் உறைந்த கள்ளக்குறிச்சி கிராமம்..!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண் குழந்தைகள் விஷப் பாம்பு கடித்து உயிரிழந்தனர். மூன்று வயது தர்ஷினி, ஒன்றரை வயது ஜனனி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட அவர்களது தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூங்கிக் கொண்டிருந்த தாய், குழந்தைகளை கடித்த பாம்பு
மூக்கனூரில் இரவு நேரத்தில் தாயும் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பு மூவரையும் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
பாம்பு கடித்ததில் விஷம் உடலில் பரவியதால், மூன்று வயது தர்ஷினி மற்றும் ஒன்றரை வயது ஜனனி ஆகிய இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்க்கு தீவிர சிகிச்சை; போலீசார் விசாரணை
பாம்பு கடியால் படுகாயமடைந்த குழந்தைகளின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் ஆரம்பத்தில் கதறி அழுத தாய்! ஆனால் இப்போ... திகைத்துப் போன சிபிசிஐடி! 35 நாட்களுக்குப் பின் சிக்கிய அதிர்ச்சி தகவல்...!!!