ஒரே ஜாலி தான்.... பள்ளி தொடக்க மாதத்திலே மாணவர்களுக்கு மேலும் 9 நாட்கள் விடுமுறை..!!!



june-2026-holidays-tamilnadu-schools-reopen

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்து, ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் மாணவர்கள் புதிய கல்வியாண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். அதேநேரத்தில், பள்ளிகள் மற்றும் அலுவலகப் பணிகள் தொடங்கும் ஜூன் மாதத்திலும் கணிசமான விடுமுறை நாட்கள் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஜூன் மாத விடுமுறை பட்டியலும் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசுப் பொதுவிடுமுறை சேர்ந்து இந்த மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் ஓய்வு கிடைக்க உள்ளது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!! மகிழ்ச்சியில் மாணவர்கள்...!!!

வார இறுதியில் 8 நாட்கள் விடுமுறை

ஜூன் மாதத்தில் மொத்தம் 4 வார இறுதிகள் வருகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை கணக்கில் எடுத்தால், 8 நாட்கள் விடுமுறையாக அமைகின்றன. பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என பலருக்கும் இந்த விடுமுறைகள் பயனுள்ளதாக இருக்கும்.

முஹர்ரம் காரணமாக 3 நாள் தொடர் விடுமுறை

இதுதவிர, ஜூன் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் வருவதால், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

பள்ளி தொடக்க மாதத்திலேயே 9 நாட்கள் ஓய்வு

வார இறுதி விடுமுறைகளான 8 நாட்களுடன் முஹர்ரம் பொதுவிடுமுறையும் சேர்ந்து, ஜூன் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல் மாதத்திலேயே இவ்வளவு விடுமுறை நாட்கள் இருப்பது மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.... அனைத்து பள்ளிகளின் பள்ளிக்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!!!