ஜெ.அன்பழகன் இறப்பில் இப்படி ஒரு ஆச்சர்யம்! தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் இரங்கல்!
ஜெ.அன்பழகன் இறப்பில் இப்படி ஒரு ஆச்சர்யம்! தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் இரங்கல்!

உலகில் மனிதன் பிறந்தால் இறப்பு என்பது உண்டு என்பது உலக நியதி. ஆனால் தனது பிறந்த தேதியில், உயிர் பிரியும் நாள் என்பது பலருக்கும் அமையாது. அந்தவகையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அவரது பிறந்தநாள் தினத்தில் உயிரிழந்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி அன்பழகன் காலமானார்.
1949ம் ஆண்டு திமுக துவங்கிய போது இருந்தே, திமுகவில் இயங்கியவரும், மறைந்த திமுக தலைவரின் கருணாநிதியின் நண்பருமான பழக்கடை ஜெயராமனின் மகன்தான் ஜெ. அன்பழகன். 1958ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி பிறந்தவர். அவரது 62 வது பிறந்த தினமான ஜூன் 10 ஆம் தேதி அன்றே அவரது உயிரும் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்கு திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.