ஊருக்கு வந்தா தக்காளி சட்னி....நமக்கு வந்தா ரத்தமா.? உதயநிதி ஸ்டாலினுக்கு ஷாக் கேள்வி கேட்ட ஜெய்ஆனந்த் திவாகரன்.!

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் "போஸ் மக்கள் பணியகம்" என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மக்களின் எளிய வாழ்கையில் வரும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் நேரில் சென்று உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போஸ் மக்கள் பணியகம் இயக்கத்தினர் கஜா புயலின் போது, அதிகப்படியாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் கூட கிராமத்திற்குள் செல்லமுடியாத சூழ்நிலையில் நடந்தே சென்று உதவிகளை செய்துவந்தனர். மேலும் அந்த இயக்கத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் இளைஞர்கள் என்பதால் தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலில் உள்ள கஷ்டப்படும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கு பகிரங்க கேள்வியை எழுப்பியுள்ளார் ஜெய் ஆனந்த் திவாகரன். அதில், "உதயநிதி அவர்களே
அன்னை பில்டர்ஸ் எப்படி உங்களுக்கு நண்பர் அதனாலேயே அவர் உங்கள் பினாமி ஆகிவிடுவாரா?. Snj distilleries உங்கள் நண்பர் அதற்காக நாங்கள் அவர்களை உங்கள் பினாமி என்று கூற முடியுமா? தொழில்அதிபர் ராஜா சங்கர் உங்கள் நண்பர் அவர் உங்கள் பினாமியா? உங்கள் தந்தையின் வாகனங்கள் கூட மேலே குறிப்பிட்ட ஒருவர் பெயரில் உண்டு. நட்பின் அடிப்படையில் அதை பயன்படுத்துகிறீர்கள் அதற்காக அவர்களை எல்லாம் உங்கள் பினாமி என ஒற்றுக்கொள்வீர்களா? அதை உங்களுடையது என நாங்கள் சொல்ல முடியுமா? ஊருக்கு வந்தா தக்காளி சட்னி....நமக்கு வந்தா ரத்தம்!" என பதிவிட்டுள்ளார். ஜெய்ஆனந்த் திவாகரன் பதிவிற்கு ஏராளமான பாசிட்டிவ் கருத்துக்கள் குவிந்து வருகின்றது.