13 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்தில் நேர்ந்த சோகம்; மூக்கில் இரத்தம் வெளியேறி பறிபோன உயிர்.!



in thanjavur Pattukottai 7 Year Old Girl Dies 

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரின் மனைவி பரிமளா. தம்பதிகளுக்கு 13 வயதுடைய கவிபாலா என்ற மகள் இருக்கிறார். 

சிறுமி அங்குள்ள பள்ளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, விளையாடிக்கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: வயிற்றுவலி, மனஅழுத்ததால் விபரீதம்; 35 வயது பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!

thanjavur

சிறுமி மரணம்

அப்போது, திடீரென அவரின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறி மயங்கி இருக்கிறார். இனால் சிறுமியை ஆசிரியர்கள் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு சிறுமி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: என்னது கொத்து பரோட்டா இல்லையா? கடையை சூறையாடிய ஐவர் கும்பல்..!