#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
வயிற்றுவலி, மனஅழுத்ததால் விபரீதம்; 35 வயது பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில், திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்று முன்தினம் மதியம் இரயில் பயணம் செய்தது. இரயில் தாராசுரம் பகுதியில் சென்றபோது, 40 வயதுடைய பெண், திடீரென இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
பெண் தற்கொலை
இந்த விஷயம் குறித்து இரயில் எஞ்சின் ஓட்டுநர் கும்பகோணம் இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: என்னது கொத்து பரோட்டா இல்லையா? கடையை சூறையாடிய ஐவர் கும்பல்..!
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தாராசுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஆனந்தி (வயது 35) தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், அவர் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: தஞ்சாவூர்: கல்லூரி கழிவறையில் மாணவிக்கு பிரசவம்; காதல் எல்லை மீறியதால் வகுப்பு நேரத்தில் அதிர்ச்சி.!