தமிழகம்

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் இருவர் உயிரிழப்பு..!

Summary:

In tamilnadu 3rd corona patients died

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்நோயின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்நோயால் தமிழகத்தில் மொத்தமாக 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ஏற்கனவே மதுரையை சேர்ந்த ஒருவர் பலியான நிலையில் இன்று காலை விழுப்புரத்தை சேர்ந்த 52 வயது முதியவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது புதிதாக மூன்றவது நபர் பலியாகியுள்ளார். கொரோனா பாதிப்பால் தேனியை சேர்ந்த 52 வயது பெண்மணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். தற்போது தமிழகத்தில் மொத்தமாக 3 நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள்.


Advertisement