திருமணத்திற்கு முதல் நாள் கம்பி நீட்டிய மணமகன்.. பெண் வீட்டார் குமுறல்.!



in Ramanathapuram Paramakudi Groom Escapes from Wedding 

இறுதி நேரத்தில் திருமணம் செய்யாமல் ஓட்டம் பிடித்த மணமகனை, காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பொன்னையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாண்டி. இவருக்கும், அங்குள்ள மேலப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே, திருமணம் முடிய நிச்சயம் செய்யப்பட்டது. 

முதலில் தடபுடலாக மணமகன் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்ய வைத்த நிலையில், மணமகன் வீட்டார் திருமணம் வேண்டாம் என சொல்லி இருக்கின்றனர். பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, விஷயம் காவல் நிலையம் வரை சென்றது. 

இதையும் படிங்க: #JustIN: அரசுப்பேருந்து மோதி பயங்கரம்; 5 மாத கைக்குழந்தை மரணம்.. பரமக்குடியில் சோகம்.!

காவல் நிலையத்தில் புகார்

அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திருமணத்திற்கு ஒரு நாள் இருக்கும் சூழலில், திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மணமகன் வீட்டார் திடீரென கம்பி நீட்டி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மணமகள் வீட்டார், காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். 

ramanathapuram

பெண் தரப்பு ஆதங்கம்

புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கூலி வேலை பார்த்து குடும்பத்தோடு பிழைத்த வந்த நிலையில், திருமணம் என்ற பெயரை வாக்குறுதி அளித்து ஏமாற்றி சென்றது நடந்துள்ளது. இதனால் நாங்கள் குடும்பத்துடன் தவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் பெற்றோர் குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஜாதகத்தை காரணம் காண்பித்து இறுதி நேரத்தில் திருமணத்தை தடுத்த நபர்கள், திருமணத்திற்கு முதல்நாள் காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி ஓடிவிட்டதாக பெண்ணின் பெற்றோர் ஆதங்கம் தெரிவிகிக்கின்றனர்.

 

இதையும் படிங்க: கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்; கணவரை தீர்த்துக்கட்ட விபரீத செயல்..!