திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
வேங்கைவயலில் நடந்தது என்ன? திட்டமிட்டு பரப்பப்பட்ட வன்மம்.. ஆயுதப்படை காவலரின் இழிச்செயல்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி இருக்கிறது. இந்த தொட்டியில் கடந்த 26 டிசம்பர் 2022 அன்று மலம் கலக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பான புகார் எழுந்து விசிக கட்சி, இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பல தரப்பு, ஆதிக்க ஜாதிவெறி எண்ணம் கொண்டவர்கள், குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறினர். போராட்டமும் நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இதனிடையே, இந்த விஷயம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்த நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி வழக்கு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: #Breaking: கனிமவளக்கொள்ளையை எதிர்த்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; களமிறங்குகிறது சிபிசிஐடி.. அதிரடி உத்தரவு.!
அதன்படி, குற்றவாளிகளாக அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்ளூரை சேர்ந்த கவுன்சிலரின் கணவரை பழிவாங்க, ஜாதி சண்டையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான இழி செயலை கையில் எடுத்தது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் பட்டியலின இளைஞர்களான ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, இளைஞர்கள் முத்துகிருஷ்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு முறை துள்ளத்துடிக்க ஏற்றி பயங்கரம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!