கணவன் - மனைவி சண்டையில் கொலை.. தடுக்க வந்த மகளும் படுகாயம்.. தந்தை வெறிச்செயல்.!



in-perambalur-husband-killed-wife

கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியவர், மீண்டும் வீட்டுக்கு வந்து மனைவியை படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல் (வயது 50). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தங்கவேலின் மனைவி மாரியம்மாள் (வயது 43). 

தம்பதிகளுக்கு கவிதா என்ற 24 வயது மகளும், இளவரசன் என்ற 22 வயது மகனும் இருக்கின்றனர். கடந்த சில மாதமாகவே தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட வந்துள்ளது. 

இதையும் படிங்க: பெரம்பலூர்: எக்ஸ்.எல் வாகனத்தில் 6 பேர் பயணம்.. நடந்த கோர விபத்து.. சிறுவன் பலி., 5 பேர் படுகாயம்.!

இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல் வீட்டிலிருந்து வெளியேறி, பின் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை திடீரென வீட்டிற்கு வந்தவர், மீண்டும் தனது மனைவியிடம் தகராறு செய்தார். 

Perambalur

நிகழ்விடத்தில் மரணம்

அப்போது ஆத்திரத்தில் கத்தியால் அவரை சரமாரியாக குத்திய நிலையில், அம்மாவை காப்பாற்ற வந்த கவிதாவுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் மாரியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

மாரியம்மாள் மற்றும் கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரியம்மாளின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. 

மேலும், கவிதா காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: மனைவி உட்பட 10 பெண்கள் குளிக்கும் வீடியோ.. பெரம்பலூர் இளைஞரின் அதிர்ச்சி செயல்.!