என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
பெரம்பலூர்: எக்ஸ்.எல் வாகனத்தில் 6 பேர் பயணம்.. நடந்த கோர விபத்து.. சிறுவன் பலி., 5 பேர் படுகாயம்.!

விதியை மீறி பயணம் செய்த சிறார்கள், சாலையை கடக்க முற்பட்டபோது காண்பித்த அலட்சியத்தால் ஒருவரின் உயிர் பறிபோனது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு, முருக்கன்குடி பிரிவு சாலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எக்ஸ்.எல் வாகனத்தில் ஆறு சிறுவர்கள் பயணம் செய்தனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்த போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக பயணம் செய்த கார் ஒன்று டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: மனைவி உட்பட 10 பெண்கள் குளிக்கும் வீடியோ.. பெரம்பலூர் இளைஞரின் அதிர்ச்சி செயல்.!
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஆறு பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டது படுகாயம் அடைந்தனர். இந்த சோக சம்பவத்தில் பெருமாத்தூர் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் முத்துக்குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவனையில் சிகிச்சை
மேலும், மங்களமேடு பகுதியில் வசித்து வரும் 16 வயது சிவராமன் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றிவேல், பிரகாஷ், ஆகாஷ் ஆகிய 16 வயது சிறுவர்கள், ரகு என்ற 20 வயது இளைஞர் என நான்கு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மங்களமேடு காவல்துறையினர், இன்னோவா காரில் பயணம் செய்து, விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய சென்னை சேர்ந்த ஆறு பேரை தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடப்போர் செய்யும் சிறிய அலட்சியமும் எந்த மாதிரியான சோகத்தில் முடியும் என்பதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூர்: ஓடும் பேருந்தில் இறங்க முற்பட்டதால் சோகம்; 18 வயது கல்லூரி மாணவி பரிதாப பலி.!