விவசாயிகள் முதல் மாணவர்களின் வேலை வரை விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!! முழு லிஸ்ட் இதோ.....!!!
தமிழக அரசியல் களத்தில் வேகமாக வளர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கைகள் மற்றும் எதிர்கால ஆட்சித் திட்டங்களை விளக்கும் வகையில் தஞ்சாவூரில் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசும்போது இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கவனிக்கும் பல முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார்..
வேலைவாய்ப்பு குறித்து விஜய் கருத்து
கூட்டத்தில் பேசிய விஜய், அரசு வேலை மட்டும் அல்லாமல் தனியார் துறையிலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இளைஞர்களுக்கு உண்மையான திட்டங்கள் மற்றும் தெளிவான கொள்கைகள் வழங்கப்பட்டால் அவர்கள் தங்களுக்கான பாதையை தாமாகவே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கம் மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "பாலாறு மக்களின் உயிரோடும் ரத்ததோடும் கலந்த ஆறு" ! அரங்கம்மே அதிர்ந்த விஜய்யின் பேச்சு! விஜய் கூறிய வாக்குறுதிகள்!
விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதி
தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கான பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விஜய் அறிவித்தார். 5 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடனில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும். மேலும், எப்போதும் விவசாயிகள் பக்கம் தான் தவெக அரசு இருக்கும் என அவர் உறுதியளித்தார்.
கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்கள்
2 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகள் அல்லது நிலம் இல்லாத குடும்பங்களில் யாரும் அரசு பணியில் இல்லாத நிலையில், அந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கான பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளின் முழுச் செலவையும் மாநில அரசு ஏற்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று விஜய் தெரிவித்தார்.
ரேஷன் மற்றும் அடிப்படை வசதிகள்
தமிழகத்தில் 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற புதிய வரையறை அமல்படுத்தப்படும் என்றும், ரேஷன் கடைகளில் அரிசியை தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறையில் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படும்; கமிஷன் வசூல் போன்ற முறைகேடுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மீனவர்களின் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், சாலை மற்றும் பேருந்து வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் தான் எதிர்கால ஆட்சியின் முக்கிய நோக்கம் என்றும் விஜய் தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் மூலம் தவெக வாக்குறுதிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் -சங்கீதா புகைப்படத்துடன் தவெக கூட்டத்திற்கு வந்த தொண்டர்! கூட்டத்தில் பரபரப்பு!!!