மனைவி உட்பட 10 பெண்கள் குளிக்கும் வீடியோ.. பெரம்பலூர் இளைஞரின் அதிர்ச்சி செயல்.!



in Perambalur Man Capturing Woman Bath Including Wife Video 

 

சொந்த மனைவி உட்பட இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கவிதா (வயது 45, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த பிப்.07 அன்று தனது வீட்டின் குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: பெரம்பலூர்: ஓடும் பேருந்தில் இறங்க முற்பட்டதால் சோகம்; 18 வயது கல்லூரி மாணவி பரிதாப பலி.!

அப்போது, ஜன்னல் இடைவெளி வழியாக, செல்போன் இருப்பதை கவனித்துள்ளார். இதனால் யாரோ தான் குளிப்பதை வீடியோ எடுப்பதாக உணர்ந்த அவர், வெளியே வந்து பார்த்துள்ளார். 

Perambalur

10 பேரின் குளியல் வீடியோ 

அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 29) என்ற இளைஞர், அவ்வழியாக சென்றது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த கவிதா, தனது கணவர் வீட்டிற்கு வந்ததும் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் மோகன்ராஜை நேரில் அழைத்து, அவரின் செல்போனை பறித்து பார்த்தபோது, கவிதா, மோகன்ராஜின் மனைவி உட்பட 10 க்கும் ஏற்பட்ட பெண்களின் குளிக்கும் வீடியோ இருந்துள்ளது.

இதனால் அங்குள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் சுமதி புகார் அளிக்கவே, இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

இதையும் படிங்க: கல்விக்கடன் ரத்தை நம்பி ஏமாற்றம்.. மேலாளரின் கெடுபிடியால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.!