பெரம்பலூர்: ஓடும் பேருந்தில் இறங்க முற்பட்டதால் சோகம்; 18 வயது கல்லூரி மாணவி பரிதாப பலி.!



in Perambalur 18 Year old Student Died 

 

பெரம்பலூரில் தவறான பேருந்தில் ஏறிய மாணவி, ஓடும் பெருஹில் இறங்க முற்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரின் மகள் குணவதி (வயது 18). இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை & அறிவியல் கல்லூரியில், பிசிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: கல்விக்கடன் ரத்தை நம்பி ஏமாற்றம்.. மேலாளரின் கெடுபிடியால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.! 

நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடலூரில் இருக்கும் நண்பரின் அக்கா திருமணத்திற்கு சென்றார். பின் மீண்டும் சொந்த ஊர் செல்ல, மதியம் சுமார் 01:30 மணியளவில், பெரம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தார். 

Perambalur

நிலைதடுமாறி கீழே விழுந்தார்

அப்போது, கடலூர் பேருந்து என நினைத்து, திருச்சி பேருந்தில் தவறாக ஏறியுள்ளார். இதனால் ஓடும் பேருந்தில் அவசரத்தில் கீழே இறங்கி இருக்கிறார். இதில் அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். 

சாலையில் விழுந்த குணவதிக்கு பின்தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவியை மீட்டவர்கள், அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: #பெரம்பலூர் : கழிவுநீர் வாய்க்காலில் வீசிய துர்நாற்றம்.. தோண்டி பார்த்ததில் பேரதிர்ச்சி.!