#பெரம்பலூர் : கழிவுநீர் வாய்க்காலில் வீசிய துர்நாற்றம்.. தோண்டி பார்த்ததில் பேரதிர்ச்சி.!



perambalur women body found in drayage

காணாமல் போன மூதாட்டி

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி அருகே வடுகர் தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி நல்லம்மாள் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இவரது குடும்பத்தினர் பல இடங்களில் சுற்றி திரிந்து தேடியும் நல்லம்மாள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

கழிவுநீரில் துர்நாற்றம்

இந்த நிலையில், தா.பேட்டை கடைவீதிக்கு அருகில் இருக்கும் கழிவு நீர் வாய்க்காலில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசுவதாக பேரூராட்சிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: பெரம்பலூர்: 20 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த 27 வயது பேராசிரியை.. கணவர், குழந்தை பரிதவிப்பு.!

drynage

உள்ளே இருந்த பிணம்

அப்போது அங்கே வயதான ஒரு பெண்ணின் பிணம் கிடப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து கழிவு நீர் வாய்க்காலில் போடப்பட்டிருந்த சிறு பாலத்தை ஜே சி பி யின் மூலம் அகற்றி பார்த்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

பரிசோதனையில் அது நல்லம்மாளின் உடல் தான் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து, துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அந்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அசிங்கமா கண்டக்டர் திட்டுறாரு..  புகார் சொன்ன மாணவன்.. அதிரடி காட்டிய அமைச்சர் சிவசங்கர்.!