#JustIN: 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை.. அரசு அதிரடி உத்தரவு.!



Karnataka Government Bans Social Media Use for Children Under 16 to Protect Mental Health

சிறார்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக மாநில அரசு அதிரடி சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.

அதிரடி காட்டிய அரசு:

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் முதலமைச்சர் சித்தராமையா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அம்மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பார்க்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுவதை தடுக்கவும், செல்போனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் கொண்டு வரப்படும் எனவும், மேகதாது திட்டம் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அப்பா மாதிரி இருந்துட்டு...ச்சீ.. ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்! பயந்து நடுங்கிப்போன சிறுமி! அதிர்ச்சி வீடியோ காட்சி....

சட்டம் அறிமுகம்:

சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த பல நாடுகளும் தடைகளை விதித்து வருகிறது. இதனிடையே, கர்நாடக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனத்தை பெற்றுள்ளது. இதன் வாயிலாக அம்மாநிலத்தில் பரிசீலனையில் இருந்த இந்த சட்ட முன்வடிவு, துணை வேந்தர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் சட்டத்தை கொண்டு வந்தன. தற்போது, அதைப்போல கர்நாடக மாநிலத்திலும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

karnataka

கவலை அதிகம்:

இந்த விஷயம் குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள் இளைஞர்களை போதை வலையில் சிக்க வைத்துள்ளது. அவ்வாறான தீங்கு விளைவிக்கும் பழக்கத்தின் தாக்கம் குறித்து கவலை எழுந்துள்ளது. குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு, பைடக்கும் பழக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: Bird Flu: தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. ஆப்-பாயில் சாப்பிடாதீங்க.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.!