15 வயது சிறுமி 10 பேரால் வன்கொடுமை.. பிறந்த குழந்தை.. திண்டுக்கல்லில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி.. பதறவைக்கும் தகவல்.!



in Dindigul 15 year Old Girl Raped by 10 Man After Delivery Dark side of Horror Comes Light 

கூலித்தொழிலாளர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்த அதிர்ச்சி சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. படிக்க வேண்டிய வயதில் சிறுமிக்கு நடந்த பெருங்கொடூரமும், அதனை நடத்திய கயவர்களின் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வயிற்று வலி:

Dindigul News: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. உடல்நலம் குன்றிய நண்பரை பார்க்கச் சென்றபோது பயங்கரம்.! சென்னையில் ஷாக்.!

Crime news

குழந்தை பிறந்தது:

இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. உடனடியாக இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த அதிகாரிகள் சிறுமியிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.

Crime news

பலாத்காரம் உறுதி:

அப்போது, அதிர்ச்சிதரும் உண்மை வெளியானது. அதாவது, சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது தெரியவந்தது. இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியின் செல்போனும் கைப்பற்றப்பட்டது. அப்போது, சிறுமியை பல கயவர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

Crime news

7 பேர் கைது:

முதற்கட்டமாக சிறுமியை வன்கொடுமை செய்ததாக முத்தழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 45), கிழக்கு ரதவீதி கிருஷ்ணமூர்த்தி (வயது 55) உட்பட 7 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தை திருப்பூர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: 15 வயது சிறுமி கர்ப்பம்.. 40 வயது தாய்மாமா அதிர்ச்சி செயல்.. நாமக்கல்லில் பதறவைக்கும் சோகம்.!