நிலத்தகராறில் 70 வயது முதியவர் கடத்திக்கொலை; சென்னையில் அதிர்ச்சி.. உடல் செஞ்சியில் புதைப்பு.!



in chennai Villivakkam Man Killed 

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (வயது 70). கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் மாயமானார். இவரை கண்டறிந்து தரக்கூறி, தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாயமான குமாரை தேடி வந்தனர். இதனிடையே, அவரை கொலை செய்து, உடலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் புதைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

chennai

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவி என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது. அதாவது, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பகுதியில், குமாருக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது.

இதையும் படிங்க: Gold Rate Today: ரூ.67 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்று ரூ.320 உயர்வு.!

இந்த விஷயத்தில் ஏற்பட்ட தகராறில் குமார் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, ரவி செஞ்சி அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு உடலை மீட்டெடுத்தபின்னர் அதிகாரிகளால் மேற்படி விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இ-பைக் தீப்பிடித்து நேர்ந்த சோகம்; 9 மாத கைக்குழந்தை பலி.!