வேலைக்கு ஏன் வரல? கேள்வி கேட்ட மேலாளர் சுத்தியால் அடித்தே கொலை.. சென்னையில் பயங்கரம்.!



in Chennai Manali Manager Killed 

வேலைக்கு ஏன் வரவில்லை என கண்டித்த மேலாளர் கொல்லப்பட்டார்.

சென்னையில் உள்ள மணலி, புதுநகர், வெள்ளிவாயல் பகுதியில் தனியார் கண்டைனர் யார்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கூடூர் பகுதியை சேர்ந்த சாய் பிரசாத் (வயது 45), மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் தண்டையார்பேட்டையில் வசித்து வரும் பாலாஜி (25), ஷாம் (20), சாய் சாரதி (27), முகிலன் (24) ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். 

கடந்த 5ம் தேதி அன்று பணிக்கு சென்ற பாலாஜி, பின் மறுநாள் பணியாளர்கள் வரும் முன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதுதொடர்பாக மேலாளர் பாலாஜியிடம் கேட்டபோது, இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாஜியை இனி வேலைக்கு வர வேண்டாம் என சாய் பிரசாத் கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: சென்னையில் பகீர்.. 16 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்.. பதறிய பொதுமக்கள்.. ட்விஸ்ட் வைத்த காவல்துறை.!

chennai

சுத்தியால் அடித்து கொலை

இந்த விஷயம் பாலாஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, தனது நண்பர்கள் ஷியாம், சாய் சாரதி, முகிலன் ஆகியோருடன், உறங்கிக்கொண்டு இருந்த மேலாளரை பாலாஜி சுத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சாய் பிரசாத், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மணலி புதுநகர் காவல்துறையினர், சாய் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: கல்விக்கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!