மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சென்னையில் பகீர்.. 16 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்.. பதறிய பொதுமக்கள்.. ட்விஸ்ட் வைத்த காவல்துறை.!

சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், இன்று 16 வயதுடைய சிறுமி நின்றுகொண்டு இருந்தார். இதனிடையே, சிறுமி ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறையினர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், உடனடியாக ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றனர். சிறுமி கோயம்பேடு, நெற்குன்றம், மாதா கோவில் பகுதியில் இருந்து மீட்டனர்.
இதையும் படிங்க: #Breaking: கல்விக்கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காவல்துறையினர் விசாரணை
மீட்கப்பட்ட சிறுமி தாம்பரம் காவல் ஆணையர் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். மேலும், சிறுமியை கடத்தி சென்றது யார்? எதற்காக கடத்தி சென்றார்கள்? என விசாரணை நடைபெறுகிறது.
சிறுமி கடத்தல் தொடர்பாக அவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். வடமாநில சிறுமி மீட்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
சிறுமி பத்திரமாக மீட்பு
காவலர்கள் தங்களை பின்தொடர்கிறார்கள் என்ற தகவல் அறிந்த கும்பல், சிறுமியை இறக்கிவிட்டு சென்றுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த சிறுமி, மாதவரம் செல்ல முயன்றபோது கடத்தப்பட்டு இருக்கிறார்.
சிறுமியுடைய அலறல் சத்தம் கேட்டு மக்கள் உடனடி தகவல் அளித்ததால், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணின் சேலையை இழுத்து அவமதித்த அதிமுக பிரமுகர்; சென்னையில் அதிர்ச்சி.!