துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!
உனக்காக காத்திருக்கிறேன்... மாணவனை தனிமையில் அழைத்த ஆசிரியர்.. வெளியான பரபரப்பு சம்பவம்..!
உனக்காக காத்திருக்கிறேன்... மாணவனை தனிமையில் அழைத்த ஆசிரியர்.. வெளியான பரபரப்பு சம்பவம்..!

சமீப காலமாக ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியர் தனது சொந்த ஊரில் உள்ள பள்ளியை முழுவதுமாக அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், இரவு நேரங்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளியிலே தங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இளைஞர்களை அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்கு சென்று இரவு நேரங்களில் அங்கே தங்கி விடுவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோ பதிவில் இருப்பது என்னவென்றால் அந்த ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவனுடன் பேசும் உரையாடல் கேட்பதற்கே மிக மோசமாக உள்ளது. மேலும் அந்த ஆசிரியர் மாணவனிடம் நான் உனக்காக வெகு நேரம் காத்திருந்தேன் நீ வரவில்லை.. நாளை வா.. என்று அந்த ஆடியோ பதிவில் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த ஆடியோ பதிவு உரையாடலை கேட்ட பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் அந்த ஆசிரியரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலர் வரை சென்று முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.