கருப்பாக இருப்பதாக கூறி 50 பவுன் வரதட்சணை கேட்ட கணவன்... அந்தரங்க வீடியோ காட்டி மிரட்டியதாக புகார்..!

கருப்பாக இருப்பதாக கூறி 50 பவுன் வரதட்சணை கேட்ட கணவன்... அந்தரங்க வீடியோ காட்டி மிரட்டியதாக புகார்..!


Husband who asked for dowry of 50 pounds claiming to be black...complained that he threatened her by showing her a private video..!

பெரம்பலூரை சேர்ந்த விமல் (31) என்பவருக்கும், 25 இளம்பெண்ணுக்கும் கடந்த 2021-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், விமல் தினந்தோறும் குடித்துவிட்டு‌ வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விமலின் மனைவி புகாரளித்துள்ளார்.

மேலும், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பவில்லை என்று விமல் கூறியாதாகவும், அப்படி தன்னுடன் வாழ வேண்டுமென்றால் 50 சவரன் நகை வரதட்சணையாக கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக புகாரில் கூறியுள்ளார்.

விமலின் தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, அவரது அக்கா மீனா, அக்காவின் கணவர் சிவா ஆகிய நான்கு பேர் விமலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி விமலின் செல்போனை பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருப்பது தெரியவந்தது, என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண்களிடம் உறவு வைத்துக் கொண்டதை வீடியோ எடுத்து, அதனை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடன் தனியாக இருந்தபோது அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விமலை கைது செய்தனர்.