மனைவியின் தலையை துண்டித்து கூடையில் எடுத்து செல்ல முயன்ற கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!



husband-murder-his-second-wife-in-thirupur

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர் மணிகண்டன் - பவித்ரா தம்பதியினர். மணிகண்டன் பூ விற்பனை செய்து பூசாரியாக வேலை பார்த்து வரும் நிலையில் பவித்ராவை கடந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதே போல் நேற்று மாலையும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு நடந்துள்ளது. அதில் மணிகண்டன் பவித்ராயை கொலை செய்து தலையை தனியாக துண்டித்து எடுத்துள்ளார். அதனை அடுத்து மணிகண்டனிடம் சண்டை குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அப்போது தான் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். உடனே இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 

Thirupur

அதில் மணிகண்டன் பவித்ராவின் தாயார் குறித்து பேசியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, மணிகண்டனை அடித்ததால் கோபத்தில் பவித்ராவை 30 இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தலையை தனியாக துண்டித்து எடுத்து செல்ல முயன்ற சமயத்தில் மாட்டி கொண்டதாகவும் கூறியுள்ளார். அதனையடுத்து போலீசார் பவித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.