குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவிக்கு கணவன் செய்த செயல்! துடிதுடித்த மனைவி!



Husband killed wife for baby is white

தனக்கு பிறந்த குழந்தை சிவப்பாக இருந்ததால் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் மனைவியை கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜன் – அமலா தம்பதியினர்.

இவர்களுக்கு 5 மாத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை சிவப்பாக இருந்ததால் மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அமலாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் தெரிகிறது.

Crime

இந்நிலையில் சமபவத்தன்று காலையில் குழந்தை நீண்ட நேரமாக அழுதுள்ளது. குழந்தை அழுதும் அமலா படுக்கையை விட்டு எழுந்திரிக்கவில்லை. உறவினர்கள் அமலாவை எழுப்ப வீட்டிற்குள் சென்றபோது அமலா ஏற்கனவே இறந்துபோயிருந்தார்.

இதுகுறித்து காவல் துறைக்கு புகார் கொடுத்ததன் பேரில் அமலாவின் கணவர் ராஜனை விசாரித்ததில் மனைவி மீது வந்த சந்தேகத்தால் இரவில் தூங்கும்போது தலை அணையால் அவரை அமுக்கி கொன்றுவிட்டதாக ராஜன் தெரிவித்தார். மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவனே மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.