வெளியூரில் இருந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்! மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்!

வெளியூரில் இருந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்! மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்!


husband killed her wife for doubt


திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவருக்கும் அமராவதி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 13 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். இந்தநிலையில் செந்தில் குமார் கேரளாவுக்கு சென்று கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென சொந்த ஊருக்கு வந்த நிலையில் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அமராவதிக்கும், செந்தில்குமாருக்கும் நேற்று சண்டை நடந்தது.

husband and wife

அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார், தனது மனைவி அமராவதி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதனால் உடல் முழுவதும் தீ பரவியதில் வெப்பம் தாங்க முடியாமல் அமராவதி கத்தி அலறல் சத்தம் போட்டுள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அமராவதி பரிதாபமாக உயிரிழந்தார். அமராவதி இறந்த தகவல் அறிந்த செந்தில்குமார், போலீசாருக்கு பயந்து வீட்டுக்கு அருகே உள்ள வேப்பமரத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர்.