தமிழகம்

மனைவி இறந்த அதிர்ச்சி.! அடுத்த நிமிடமே உயிரிழந்த கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் புயல்மணி. 69 வயது நிரம்ப

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் புயல்மணி. 69 வயது நிரம்பிய விவசாயியான இவரது மனைவி லட்சுமி(63). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புயல்மணியும், லட்சுமியும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக லட்சுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதே என்று புயல்மணி மிகுந்த கவலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த தகவல் புயல்மணிக்கு தெரிய வந்ததும் அவர் மிகுந்த வேதனை அடைந்தார். இத்தனை ஆண்டுகாலம் இணைபிரியாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த தனது மனைவி தன்னை பரிதவிக்க விட்டு சென்றதை அறிந்து புயல்மணி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். 

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த 1 மணி நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். வாழ்வில் இணைபிரியாமல் இருந்து வந்த இந்த தம்பதியினர், சாவிலும் இணைபிரியாமல் ஒன்றாக இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தம்பதியினரின் உடல்களை ஒன்றாக வைத்து இறுதி சடங்குகளை செய்தனர். 


Advertisement