தமிழகம்

எந்நேரமும் இதேதான் வேலையா? கடுப்பான கணவர்! காதை இழந்த மனைவி! செல்போனால் நேர்ந்த விபரீதம்!

Summary:

செல்போனால் நேர்ந்த விபரீதம்.!

தன் மகனை கவனிக்காமல் எப்பொழுதும் செல்போனிலேயே  பேசிக்கொண்டிருந்த மனைவி மீது ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியின் காதை துண்டாக அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜா .40 வயதான இவர் எடப்பாடியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 

மேலும் இவரது மனைவி சந்தியா .இவர் தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் சந்தியாவுக்கு தான் பணிபுரியும் இடத்தில நண்பர்கள் கூட்டம் அதிகம் .மேலும் அவர் வீட்டுக்கு வந்தாலும் அவர்களுடன் எப்பொழுதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் .

மேலும் இதனால் கோபமடைந்த முத்துராஜா பலமுறை  குழந்தையை கவனி,செல்போனில் பேசுவதை குறைத்து கொள் என பலமுறை கண்டித்துள்ளார்.ஆனால் அதனை பொருட்படுத்தாது சந்தியா தொடர்ந்து அதே தவறை செய்து வந்துள்ளார் .

               husband wife fight க்கான பட முடிவு

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த கணவர்  இருந்த அரிவாள்மனையை எடுத்து சந்தியாவின் காதை வெட்டியுள்ளார். 

இதில் சந்தியாவின் காது துண்டானது.பின்னர் சந்தியாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் முத்துராஜா மீது சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.


Advertisement