தகாத உறவிற்காக வாக்குவாதம் நடத்திய கணவன் மனைவி!. இறுதியில் நேர்ந்த சோகம்!.

தகாத உறவிற்காக வாக்குவாதம் நடத்திய கணவன் மனைவி!. இறுதியில் நேர்ந்த சோகம்!.


husband and wife fight for illegal affairs


சென்னை எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் புஸ்பலதா என்பவரும், ஜான்பால் என்பவரும் குடும்பத்தாரை எதிர்த்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் புஸ்பலதா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புஸ்பலதாவுக்கு டி.பி நோய் இருந்து, அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். அவருக்கு நோய் இருப்பதை அறிந்த ஜான்பால் நெருங்கி பழகாமல் இருந்துள்ளார். இதுபற்றி தோழிகளிடம் கூறியுள்ளார் புஸ்பலதா.

இதனையடுத்து ஜான்பாலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த புஸ்பலதா, கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார்.

இதனை பொருட்படுத்தாத ஜான்பால், தகாத உறுவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எனக்கு சாதகமாக இருப்பதாகவும், தம்மை ஒன்றும் செய்ய முடியாது எனவும் ஜான் பால் மனைவியிடம் கூறியுள்ளார். 

இதனால் மனமுடைந்த புஸ்பலதா, சனிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.