கோர விபத்து!! அமைதியாக சென்ற கார்.. அதிவேகமாக வந்து மோதிய லாரி.. 5 பேர் பலியான சம்பவம்..!



horrible-accident-a-car-that-went-quietly-a-truck-came

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக சென்று கொண்டிருந்த காரின் பின்னால் அதிவேகமாக வந்த மணல் லாரி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றுள்ளன. அப்போது லாரியின் பின்னால் கார் ஒன்று வந்துள்ளது. இந்தக் காரில் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய், மனைவி, தாயார் மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.

Road accident

அப்போது லாரி ஒன்றின் பின்னால் வந்த கொண்டிருந்த இவர்கள் காரின் பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கும் இடையே கார் சிக்கிக் கொண்டு அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் காரில் பயணித்த அனைவருமே சம்பவ இடத்திலே பலியாயினர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.