40 வயது பெண்ணுக்கு ஆசைப்பட்டு அல்லோல்பட்ட நபர்.. ஆர்வத்துடன் சென்றவருக்கு காத்திருந்த கும்மாங்குத்து..!



Honey Trap Gang Busted in Chennai: Man Assaulted, Robbed After Being Lured by Woman

தலைநகரில் நடந்த ஹனிடிராப் முயற்சி சம்பவம் இளைஞரின் புகாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

திருட்டுத்திட்டம்:

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண், புழல் டீச்சர்ஸ் காலனி 3வது தெருவில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு காவாங்கரை பகுதியில் வசித்து வந்த கன்னியப்பன், சிந்துஜன் ஆகியோர் அறிமுகமாகி இருக்கின்றனர். இவர்கள் மூவரும் சேர்ந்து ஹனிடிராப் முறையில் மோசடியில் ஈடுபட்டு அதிக பணம் சுருட்டலாம் என நினைத்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு ஆசைகாட்டி தனிமையில் அழைத்து வந்து பணம் பறிப்பது இவர்களின் திட்டமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க: பிஞ்சிலேயே பழுத்த 3 சிறார்கள்.. 14 வயது மாணவிக்கு.,  தமிழகத்தில் இப்படியா? திடுக்கிடவைக்கும் சம்பவம்..!

Crime news

சரமாரி தாக்குதல், பணம் பறிப்பு:

இந்த கும்பலிடம் உல்லாசத்துக்கு ஆசைப்பட்ட சூளைமேடு பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் பேசி இருக்கிறார். இவர்களும் கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி முகவரிக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள். பெண்ணின் அழைப்பை ஏற்று நபரும் வந்த நிலையில், படுக்கை அறைக்கு பெண் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த கன்னியப்பன், சிந்துஜா தங்களை காவல்துறை அதிகாரி என அறிமுகம் செய்து இருக்கின்றனர். மேலும், சரமாரியாக 40 வயது நபரை தாக்கி உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு என மிரட்டி வாங்கி இருக்கின்றனர். பதறிப்போன நபரும் ரூ.3000 பணம் கொடுத்துள்ளார்.

Crime news

அதிரடி நடவடிக்கை:

இந்த பணம் போதாது என கூறிய கும்பல், உனது போட்டோ எங்களிடம் இருக்கிறது. இதுகுறித்து எங்காவது கூறினால் போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவோம் என எச்சரித்துள்ளனர். பதறிப்போன நபர் தன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த லேப்டாப்பையும் கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த நபர் உடனடியாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று 3 போரையும் அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக பெங்களூரில் இதுபோன்ற ஹனிடிராப் சம்பவங்கள் அதிகம் நடந்து வந்த நிலையில், சென்னையில் ஹனிடிராப் பெயரில் மோசடிகள் நடப்பதும் அம்பலமாகி வருகிறது. 

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!