நகர்ப்புறங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு! நீதிமன்றம் அதிரடி!
கோவை மாவட்டத்தில், 369 ஏக்கரில் துடியலூர்-வெள்ளக்கிணறு வீட்டு வசதித் திட்டத்தை கடந்த 1996-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கியது. இதற்காக தனியாருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நிலத்தை கையகப்படுத்துவது குறித்து அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்யவில்லை. அதனால், நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என கடந்த 2008-ம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேல்முறையீடு செய்தது. ஆனால் இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. வசிப்பிடம் என்பது மக்களுக்கு அடிப்படை தேவையாகும். ஆனால், இங்கு பலருக்கு அந்த வசதி கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் சாலையோர நடைபாதைகளிலும், ராட்சத பைப்புகளுக்கு உள்ளேயும், மரங்களுக்கு அடியிலும் வசிக்கின்றனர். மத்திய அரசும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கும்போது, பிறருக்கு அது நன்மையை ஏற்படுத்தும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை மக்கள் வாங்குவதை தடுக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது.
-aep6g.jpeg)
ஒரு குடும்பத்துக்கு ஒரு படுக்கை அறையுடன் கூடிய வீடு போதுமானது. குழந்தைகள் எதிர்காலத்துக்காக கூடுதலாக ஒரு வீடு வாங்க அனுமதிக்கலாம். அதற்காக கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கலாம். ஆனால், 3-வது வீடு அல்லது அதற்கு மேல் வீடுகளை சொந்தமாக வாங்க தடை விதிக்கவேண்டும். இதன்மூலம் வீடுகளின் விலை குறைவது மட்டுமல்லாமல், எளியவர்களும் வீடுகளை வாங்கக்கூடிய நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல, ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், விவசாய நிலங்களை வீட்டுமனையாக மாற்றுவதை தடுக்க முடியும். விவசாய நிலங்களும் பாதுகாக்கப்படும். முதல் கட்டமாக நகர் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தனிநபர், குடும்பத்தினர் வாங்கக்கூடாது என்ற தடை உத்தரவை ஏன் அமல்படுத்தக்கூடாது? ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கடன் கொடுக்கக்கூடாது என்று நிதி நிறுவனங்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு வருகிற மார்ச் 6-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.